search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயில்கள்"

    • வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது.
    • சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தண்டவாளத்தில் வெள்ளம் வடியாததால் சென்னை சென்ட்ரலில் இருந்து 3-வது நாளாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. மின்சார ரெயில்கள் நேற்று மாலையில் இருந்து இயக்கப்படுகின்றன. பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.

    எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் வழியாக கடற்கரை நிலையம் மூலம் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்க ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரலில் இருந்து முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்ட்ரல்-மைசூரு வந்த பாரத் ரெயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,

    பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இது தவிர மேலும் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதே போல சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    • வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    வடக்கு மத்திய ெரயில்வேக்கு உட்பட்ட ஆக்ரா - மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    8 ெரயில்கள் வழித்தடம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் (எண்:12645) 2024 ஜனவரி 6, 13, 20, 27 மற்றும், பிப்ரவரி 3 ந்தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் - எர்ணாகுளம் ெரயில் (எண்:12646) ஜனவரி 9, 16, 23, 30 பிப்ரவரி 6ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    வைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜனவரி 15, 22, 29, பிப்ரவரி 5-ந் தேதியும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி - கட்ரா ெரயில் (எண்:16317) ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2-ந் தேதி முழுவதும் ரத்தாகிறது.

    கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) 2024 ஜனவரி 21, 28ந்தேதி, மறுமார்க்கமாக கோவை வருகையில் ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரம் - புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) ஜனவரி 27, பிப்ரவரி 3-ந்தேதி ரத்தாகிறது. திருவனந்தபுரம் திரும்பும் ெரயில் (எண்:12626) ஜனவரி 29, பிப்ரவரி 5-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இத்துடன் சென்னை, மதுரை, நெல்லையில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் 38 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாரபட்சம் காட்டப்படுவதாக பயணிகள் புகார்
    • 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரெயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 2 நடைமேடைகள், சுற்றுலா பயணிகள் வரும் ரெயில்கள் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நடைமேடை என்று மொத்தம் 3 புதிய நடைமேடைகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்பு பாதைகள் தற்போது ரெயில்கள் இயங்கும் பழைய இருப்பு பாதையுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்காக வேண்டி வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருநெல்வேலி-நாகர்கோவில், திருவனந்தபுரம்-நாகர்கோவில் மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இந்த பணிகள் பகல் நேரத்தில் நடக்க இருப்பதால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து பகல் நேரத்தில் இயங்கும் சில ரெயில்கள் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து காலை, மாலை, இரவு நேரங்களில் இயங்கும் ரெயில்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும்.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி (எண் 06643) பயணிகள் ரெயில் 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரெயில் இரு மார்க்கங்களிலும் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும், டிசம்பர் 2 முதல் 4-ந் தேதி வரை என மொத்தம் 8 நாட்களுக்கு முழுமையாக இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. புனே-கன்னியாகுமரி (எண் 16381) ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களுர்-கன்னியாகுமரி (எண் 16526) ரெயில் 8 நாட்களுக்கு நாகர்கோவில்-கன்னியாகுமரி வரை பகுதியாக 8 நாட்களுக்கும், திருவனந்தபுரம்-கன்னியாகுமரிக்கு ஒரு நாளும் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாகவும் இவ்வாறு அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-புனலூர் ரெயில் நாகர்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி-கன்னியாகுமரி ரெயில் திருநெல்வேலி-– கன்னியாகுமரி இடையே 26-ம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி ரெயில் 27-ந் தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி மார்க்கமாக ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஹவுரா-கன்னியாகுமரி ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 27-ந் தேதி ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி-– நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-கத்ரா ரெயில் டிசம்பர் 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ெரயில் 3-ந் தேதி ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரெயில் 3-ந் தேதி பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ம் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலிருந்து புறப்படும். நிஜாமுதீன்-கன்னியாகுமரி ரெயில் வருகிற 2-ந் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-நாகர்கோவில் ரெயில் ஒரு நாள் மட்டும் 4-ந் தேதி பகுதியாக திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். கன்னியாகுமரி- புனே ரெயில் 4-ம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரெயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அறிவித்து இயக்காத காரணத்தால் சாதாரண மக்கள் தங்கள் பயணங்களை குறிப்பாக சென்னைக்கு பயணம் செய்ய சுமார் 60 முதல் 100 நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பாக ரெயில்வே துறை திடீரென ரெயில்களை பகுதியாகவோ அல்லது முழு ரெயிலும் ரத்து என அறிவிப்பு செய்வது, முன்பதிவு செய்த பயணிகளுக்கு வேண்டும் என்றே மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ரத்து செய்யப்படும் ரெயில்களில், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய 3 ரெயில்களும் திருநெல்வேலியுடன் ஒருநாள் நிறுத்தப்படுகின்றது. இந்த ரெயில்களில் குமரி மாவட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும் இங்கிருந்து தங்கள் மாநில தலைநகர் சென்னைக்கும் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    கேரளா மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களான கன்னியாகுமரி – புனே, கன்னியாகுமரி-பெங்களுர், கன்னியாகுமரி-திப்ருகார், புனலூர்-நாகர்கோவில் ஆகிய ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி வைத்து விட்டு தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா, தாம்பரம் - நாகர்கோவில் ஆகிய 2ரெயில்களையும் நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து செய்வதில் அதிக அளவில் ரெயில்கள் டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 4-ம் தேதி திங்கட்கிழமை ஆகும். ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படும் நாகர்கோவில் -ஷாலிமார் ரெயில் திருவனந்தபுரத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ரெயில்களை பகுதியாக ரத்து செய்வதற்கு முன்பு அதிக அளவில் பயணிகள் பயணிக்கும் ெரயில்களை ரத்து செய்யாமல் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்யும் ரெயில்களை முதலில் ரத்து செய்துவிட்டு பின்னர் இடபற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இந்த ரெயில்களை ரத்து செய்வது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ெரயில்கள் ஒரே ஒரு ெரயில் ஒரே ஒருநாள் மட்டும் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் படியாக மூன்று ெரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பாரபட்சமானது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்து செய்யப்படும் ரெயில்களில் அதிக அளவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் ஆன்மீகத்துக்கு என்று செல்லும் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தனியாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து ரயில்கள் வரும் கால அட்டவணையை வைத்து கன்னியாகுமரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய ரெயில்கள் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ள நாட்களில் சென்னையிலிருந்து இந்த ரெயில்களில் திருநெல்வேலி வரும் பயணிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவதற்கு வசதியாக திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லத்தக்க வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து இன்னமும் தொடர்ந்து வர இருக்கிறது. அடுத்த மாதம் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படும். இது முடிந்த பிறகு திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் இவ்வாறு பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. கடைசியாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் (எண்:16382) ஆந்திர மாநிலம் கொடுரு - கடப்பா இடையே, ரஜாம்பெட் நிலையத்தில் நின்று செல்லும்.
    • .மறு அறிவிப்பு வரும் வரை இந்நடைமுறை தொடரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    அவ்வகையில் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் (எண்:16382) ஆந்திர மாநிலம் கொடுரு - கடப்பா இடையே, ரஜாம்பெட் நிலையத்தில் நின்று செல்லும். எர்ணாகுளம் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் (எண்:18190) ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்புர் - சினி நிலையங்களுக்கு இடையே, ராஜ்கஹரர்சன் நிலையத்தில் நின்று செல்லும். இதற்கு ெரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை இந்நடைமுறை தொடரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரெயில்கள் நேற்று முதல் மதுரை ரெயில் நிலையம் வராமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரெயில்கள் நேற்று முதல் மதுரை ரெயில் நிலையம் வராமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

    திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16106) வருகிற 28-ந் தேதி வரையிலும், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்(12662) வருகிற 3-ந் தேதி வரையிலும், நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632) வருகிற 28-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரையிலும், கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16824) மற்றும் கொல்லம்-சென்னை (தென்காசி வழி) எக்ஸ்பிரஸ் ரெயில் (16102) ஆகியவை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து அங்கிருந்து சென்னைக்கு வரும்.

    இந்த ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது.

    • ஸ்ரீரங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    • சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு

    திருச்சி

    பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அதற்கு மறுநாள் முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி, வருகிற ஜனவரி 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற ஜனவரி 2-ந்தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு நாளன்று பக்தர்களின் வசதிக்காக வண்டி எண்: 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் மாலை 6.08 மணி முதல் 6.10 மணி வரை நின்று செல்லும். வண்டி எண்: 12636 மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.38 மணி முதல் 9.40 மணி வரை நின்று செல்லும்.

    இதேபோல் வண்டி எண்: 16102 கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.38 மணி முதல் 9.40 மணி வரையிலும், வண்டி எண்: 16101 சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.18 மணி முதல் 9.20 மணவி வரையிலும் நின்று செல்லும். இந்த ரெயில்கள் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு வந்தடைந்தது.
    • தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வடமாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்கள் ஒரு சில நேரங்களில் சிக்னல் கோளாறு, பேரிடர் காலங்களில் சிறிது தாமதமாக ரெயில் நிலையங்களை வந்தடையும். அந்த வகையில் மதுரை கூடலூர் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தடைந்தது.

    நெல்லைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வந்து சேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கும், தினமும் காலை 6.15 மணிக்கு நெல்லை வந்து சேரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக 7.15 மணிக்கு வந்து சேர்ந்தது.

    தினமும் அதிகாலை 5.50-க்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு வந்து சேரும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 1.20 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கும், காலை 6.50-க்கு வந்து சேர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக 8 மணிக்கும் வந்து சேர்ந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் அவதிப்பட்டனர்.

    • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே என்ஜினீயர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    குறித்த நேரத்திற்கு ரெயில்கள் வராததால் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர்.

    • இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடந்த 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா? அசைவமா? என்பது பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.

    அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்திய ரெயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இயற்கை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் ரெயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    குறிப்பாக ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதில் எந்தக் காரணத்துக்காகவும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆனால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என்பது ரெயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா? அசைவமா? என்பது பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுபோல சிற்றுண்டியா? சாப்பாடா? என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடந்த 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தரமான உணவை தயாரித்து வழங்க ஏதுவாக அவ்வப்போது கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.ஆர்.சி.டி.சி. தனது சமையலறையை மேம்படுத்த உள்ளது.

    ×